Home / உலகம் / பிரான்ஸ் /

பிரான்ஸ் மக்களின் இணைய தகவல்களை திருடிய பேஸ்புக்: அதிர்ச்சி தகவல்கள்

Posted On : May 17, 2017

பிரான்ஸ் மக்களின் தனிப்பட்ட தகவல்களை அவர்களின் அனுமதியில்லாமல் சேகரித்த பேஸ்புக் நிறுவனத்துக்கு தரவு பாதுகாப்பு நிறுவனம் 160,000 டொலர் அபராதம் விதித்துள்ளது.

பிரான்ஸில் சராசரியாக 33 மில்லியன் மக்கள் சமூகவலைதளமான பேஸ்புக்கை பயன்படுத்துகிறார்கள்.

பேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தகவல்களை அவர்களுக்கு தெரியாமல் பேஸ்புக் நிறுவனம் சேகரித்து வருவது தற்போது தெரியவந்துள்ளது.

இது குறித்து பிரான்ஸின் தரவு பாதுகாப்பு நிறுவனமான CNIL வெளியிட்டுள்ள அறிக்கையில், பயன்பாட்டாளர்களுக்கு தெரியாமல் பேஸ்புக் இதை செய்ததற்கு தரவு பாதுகாப்பு மீறல்கள் சட்டபடி 160,000 டொலர் அபராத தொகையை அந்நிறுவனம் வழங்க வேண்டும்.

தங்களின் வியாபாரம் மற்றும் விளம்பரங்களை காண்பிப்பதற்காக பயனாளர்களின் தனிப்பட்ட தரவுகளை பேஸ்புக் எடுத்துள்ளது.

அதுமட்டுமில்லாமல், இணைய பயனாளர்களின் Browsing நடவடிக்கைகளையும் கண்காணித்து அந்த தகவல்களையும் பேஸ்புக் எடுத்துள்ளதாக CNIL தெரிவித்துள்ளது.

மேலும், பிரான்ஸுடன் சேர்ந்து நெதர்லாந்து, ஜேர்மனி, பெல்ஜியம் போன்ற நாடுகளும் தங்கள் நாட்டு இணைய பயன்பாட்டாளர்களின் தகவல்களை ரகசியமாக பேஸ்புக் சேகரிக்கிறதா என ஆய்வு செய்து வருகிறார்கள்.

இதனிடையில், அந்த அபராத தண்டனையை ஏற்று கொள்ள முடியாது என பேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது.

இதை எதிர்த்து பேஸ்புக் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடருமா என்ற விவரம் தெரியவில்லை.

கடந்த வருடம் பிரான்ஸ் மக்களின் தகவல்களை அழிக்க மறுத்த கூகுள் நிறுவனத்துக்கு CNIL 100,000 யூரோ அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.

Comments

தொடர்புடைய செய்திகள்