Home / உலகம் / ஜேர்மனி /

போலி அடையாளங்களுடன் புலம் பெயர வரும் மக்கள்: அதிர்ச்சியில் அரசு

Posted On : May 17, 2017

ஜேர்மனியில் புலம் பெயர்ந்தவர்களில் பலரின் அடையாளங்களை மறு ஆய்வு செய்ததில் 10 சதவீதம் பேர் போலி அடையாளங்களுடன் நாட்டுக்குள் வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புலம்பெயருதல் மற்றும் அகதிகளின் மத்திய அலுவலகமான BAMF வெளியிட்டுள்ள அறிக்கையில், குடிவரவு அதிகாரிகள் தற்போது சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து பாஸ்போர்ட் இல்லாமல் ஜேர்மனிக்கு வந்த 1000 பேரிடம் மறு ஆய்வு கை ரேகை சோதனை நடத்தினார்கள்.

அதில், 10லிருந்து 15 சதவீதம் பேர் அடையாளங்களில் தவறு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சந்தேகம் அதிகாரிகளுக்கு வர முக்கிய காரணம் ஜேர்மனியின் ராணுவ வீரரான Franco Albrecht தான்.

Franco கடந்த பிப்ரவரி மாதம் நாச வேலை செய்யும் நோக்கில் Vienna விமான நிலையத்துக்கு வந்துள்ளான்.

அங்குள்ள கழிப்பறையில் லைசன்ஸ் இல்லாத கை துப்பாக்கியை மறைத்து வைத்திருந்த Franco அதை எடுக்க முயற்சித்துள்ளான்.

அவனை பொலிசார் பிடித்து விசாரித்த போது சிரியாவில் பழ வியாபாரம் செய்ததாக போலி அடையாளங்களுடன் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவருடன் இன்னும் இரண்டு பேரையும் பொலிசார் கைது செய்தனர். மூவரும் சிரிய அகதிகள் என்ற அடையாளத்துடன் அங்குள்ள அரசியல்வாதிகளை கொல்ல திட்டமிட்டதும் பின்னர் தெரியவந்தது.

இந்த சம்வத்துக்கு பிறகு தான் பொய் அடையாளத்துடன் ஜேர்மனிக்கு புலம் பெயர்பவர்களை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரிகள் ஆர்வம் காட்டுவதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் BAMF-ன் தலைவர் Jutta Cordt, பாராளுமன்ற உள்துறை விவகாரங்கள் குழுவினரிடம் Franco செய்த செயலை பற்றியும், புலம்பெயர்பவர்களிடம் நடத்தப்பட வேண்டிய சோதனைகள் குறித்தும் விரிவாக பேசவுள்ளார்.

Comments

தொடர்புடைய செய்திகள்