Home / உலகம் / ஐரோப்பா /

ஐரோப்பிய ஆணைக்குழுவுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி அறிவிப்பு

Posted On : May 18, 2017

ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் டொனால்ட் டஸ்க்குடன் இணைந்து செயற்படவுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோங் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதி மாளிகையில் ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் டொனால்ட் டஸ்ட் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி ஆகியோருக்கு இடையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற சந்திப்பை தொடர்ந்;து கருத்து வெளியிடும் போத மக்ரோங் மேற்படி தெரிவித்துள்ளார்.

இதன்போது, ‘ ஐரோப்பிய திட்டங்கள் எனக்கு எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை இங்கு மீண்டும் கூறுகின்றேன். ஐரோப்பிய நிறுவனங்களுடன் இணைந்து பணிபுரிய வேண்டும், அத்துடன் ஐரோப்பிய திட்டங்களுக்காக என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் வழங்க வேண்டும் என்பது எனது விருப்பம்’ என்று மக்ரோங் தெரிவித்துள்ளார்.

Comments

தொடர்புடைய செய்திகள்
பிரதான செய்திகள்