Home / உலகம் / ஐரோப்பா /

கட்சியின் தலைமை பொறுப்பிலிருந்து விலகினார் பிரதமர் என்டா கெனி

Posted On : May 18, 2017

ஃபைன் கேல் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அக்கட்சியின் தலைவரும், அயர்லாந்து பிரதமருமான என்டா கெனி அறிவித்துள்ளார்.

அவரது தலைமையினால் அதிருப்தியடைந்த அவரது கட்சியினர், அவரை பதவி விலகுமாறு வலியுறுத்தி வந்த நிலையில், நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற கட்சி கூட்டத்தில் தனது அரசியல் எதிர்காலம் குறித்த இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

எனினும், பிரதமராக நாடாளுமன்றத்தினால் உரிய நபரொருவர் நியமிக்கப்படும்வரை, பிரதமர் பதவியில் தொடர்ந்து இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு பிரதமராக நியமிக்கப்பட்ட என்டா கெனியை பதவி விலகுமாறு தொடர்ந்து அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் தனது இராஜினாமா குறித்து அறிவித்தார். அதனை தொடர்ந்து இதுவரை அவர் பதில் பிரதமராக கடமையாற்றி வருகிறார்.

Comments

தொடர்புடைய செய்திகள்