Home / உலகம் / கனடா /

கனடாவின் புதிய விருப்பம்

Posted On : May 18, 2017

NAFTA எனப்படும் வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் அமெரிக்காவுடன் மீளாய்வுக் கலந்துரையாடலை மேற்கொள்ள ஆவலுடன் இருப்பதாக கனடாவின் அனைத்துலக வர்த்தக அமைச்சர் பிரான்சுவா பிலிப் சாம்பெய்ன் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்த வாரம் வியட்நாமில் நடைபெறவுள்ள APEC என்பபடும் ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டின் போது, அமெரிக்காவின் புதிய வர்த்தக பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள ரொபேர்ட் லைட்டைசரை முதன் முறையாக நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா இது தொடர்பில் முன்வைக்கும் விடயங்கள் குறித்து ஆராய தாம் தயாராகவே உள்ளதாகவும் இதேவேளை கனடாவின் வெளிவிவகார அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்ட்டும், அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையேயான இந்த வர்த்தக பேச்சுவார்த்தைக்கான முதற்கட்ட கலந்துரையாடல்கள் விரைவில் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதை எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Comments

தொடர்புடைய செய்திகள்