Home / உலகம் / ஐரோப்பா /

பிரெக்சிற்றின் பின்னர் சலுகைகள் கிடைக்காவிட்டால் நிலைமை மோசமடையும்: தெரேசா மே

Posted On : May 18, 2017

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறிய பின்னர் அதிகபட்ச சலுகைகளை பெறத் தவறினால், பிரித்தானியா மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அந்நாட்டு பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜூன் மாதம் 8 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கொன்சர்வேட்டிவ் கட்சி வாக்காளர்களுக்கு தமது கட்சியின் கொள்கைகள் குறித்து தெளிவுபடுத்தும் உரையின் போதே தெரேசா மேற்படி தெரிவித்துள்ளார்.

இதன்போது, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெறியேற தீர்மானித்துள்ள நிலையில்  எதிர்வரும் ஐந்து வருடங்கள் மிகப்பெரும் சவாலாக அமையும் என்றும் தெரேசா மே குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ‘ஐரோப்பாவில் பிரித்தானியாவுக்கான சிறந்த ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளே நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால். இதில் நாம் தோல்வியடைந்தால் சாதாரண உழைக்கும் மக்களின் பொருளாதார பாதுகாப்பிற்கு பாதகமாக  அமையும்’ என்றும் தெரிவித்துள்ளார்.

Comments

தொடர்புடைய செய்திகள்