Home / உலகம் / ஜேர்மனி /

9 லட்சம் யூரோ கேட்டு பிரபல விளையாட்டு வீரருக்கு கொலை மிரட்டல்

Posted On : May 19, 2017

ஜேர்மனி நாட்டில் 9 லட்சம் யூரோ பிணைய தொகை கொடுக்காவிட்டால் பிரபல விளையாட்டு வீரர் ஒருவரின் பிள்ளைகளை கொலை செய்துவிடுவதாக மிரட்டிய நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஜேர்மனியின் பிரபல கார் விளையாட்டு வீரராக இருந்தவர் Michael Schumacher. இவருக்கு 20 மற்றும் 18 ஆகிய வயதுகளில் இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் இவருக்கு ஒரு மிரட்டல் மின்னஞ்சல் வந்துள்ளது.

அதில், ‘9,00,000 யூரோ பணம் கொடுக்காவிட்டால் இரண்டு பிள்ளைகளை கொலை செய்துவிடுவதாக’ மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக உடனடியாக பொலிசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டதும் மர்ம நபர் உடனடியாக கைது செய்யப்பட்டார்.

பணம் அனுப்புவதற்காக தன்னுடைய சொந்த வங்கி கணக்கு எண்ணை மின்னஞ்சல்லில் இணைத்து அனுப்பியுள்ளது தான் அவர் கைது செய்யப்படுவதற்கு காரணமாக இருந்துள்ளது.

25 வயதான அந்த நபரிடம் நேற்று விசாரணை செய்த நீதிமன்றம் மனநல மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், நீதிமன்ற வழக்கு செலவுகளுக்காக 4,500 யூரோ அபராதமும் 50 மணி நேர பொது சேவையும் செய்ய வேண்டும் எனக் கூறி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Comments

தொடர்புடைய செய்திகள்