Home / உலகம் / கனடா /

இளவரசி டயானா தொடக்க விருதைப் பெறும் ஒன்ராறியோ இளம் பெண்

Posted On : May 20, 2017

ஒன்ராறியோவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் இளவரசி டயானா தொடக்க விருதை பெறுகின்றார். இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசர் ஹரி ஆகியவர்களால் ஆரம்பிக்கப்பட்ட டயானா தொடக்க விருது உலகம் முழுவதும் உள்ள 20 இளவயதினருக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

இவர்களில் ஒன்ராறியோவை சேர்ந்த 14 – வயது இளம் பெண் ஒருவரும் அடங்குகின்றார். வியாழக்கிழமை இந்த விருது வழங்கல் லண்டனில் அமைந்துள்ள  சென்ட். ஜேம்ஸ் மாளிகையில் இடம்பெற்றது.

வேல்ஸ் இளவரசி டயானாவின் ஞாபகார்த்தமாக இந்த விருது விழா ஆரம்பிக்கப்பட்டது.  உலகத்தை சிறந்ததாக மாற்றும் சக்தி இளைஞர்களிடத்தே உள்ளதென டயானா நம்பிக்கை வைத்துள்ளர்.

பீற்ற பொறோ ஒன்ராறியோவை சேர்ந்த வெயித் டிக்கின்சன் என்பவர் “Cuddles for Canada,”  என கண்டறியப்பட்டார். இப்பெண் ஒன்பது வயதாக இருக்கும் போது இவரது அத்தைக்கு மார்பக புற்று நோய் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இவர் “Cuddles for Canada”  என்ற அறக்கட்டளையை ஆரம்பித்து செயற்படுத்தினார்.

சிகிச்சையின் போது வெயித்தின் அத்தை மிகவும் குளிராக இருப்பதாக தெரிவிக்க வெயித் கம்பளி உரோம போர்வை ஒன்றை உருவாக்கினார்.
அன்றிலிருந்து கிட்டத்தட்ட 3,000 போர்வைகளை உருவாக்கியிருக்கிறார்.

கனடா மற்றும் பல உலக நாடுகளிற்கும் அவைகளை அனுப்பி அதன் மூலம் 30,000 டொலர்களிற்கும் மேலான தொகை பணத்தை சேகரித்துள்ளார். தேவை ஏற்படுபவர்களுக்கு இப்போர்வைகள் இலவசமாக கிடைக்க வேண்டும் என்பதையும் உறுதி செய்தாள்.

வெயித் தன்விருப்பமாக ஒவ்வொரு போர்வைகளையும் பொழுது போக்கு அல்லது பிடித்த நிறம் போன்றவைகளை அடிப்படையாக கொண்டு தயாரித்ததுடன் போரில் காயமடைந்து அல்லது காயத்திற்கு பின்னர் ஏற்படும் அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டு (PTSD) வீடு திரும்பும் போர்வீரர்களிற்கும் வழங்கப்படும் என டயான அவாட் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

விருது விழாவில் பேசிய இளவரசர் வில்லியம் மில்லியன் கணக்கான மக்களை தனது தாயார் அவரது வாழ்நாளில் தொட்டுள்ளார் எனவும் அவரது எண்ணற்ற இரக்கமும் துணிவும் வாகன விபத்தொன்றில் இரண்டு தசாப்தங்களிற்கு முன்னர் அவர் இறந்துள்ள போதும் இன்று வரை அனைவரது மனதிலும் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறார் எனக் கூறினார்.

Comments

தொடர்புடைய செய்திகள்