Home / உலகம் / பிரான்ஸ் /

தீவிரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் பிரான்ஸ் தோள்கொடுக்கும்: இமானுவல் மக்ரோங்

Posted On : May 20, 2017

வடக்கு மற்றும் மேற்கு ஆபிரிக்க நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் பிரான்ஸ் தோள்கொடுக்கும் என பிரான்ஸின் புதிய ஜனாதிபதி இமானுவல் மக்ரோங் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவுக்கு வெளியில் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இமானுவல் மக்ரோங் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலிக்கு சென்றிருந்தார். அங்கு மாலி ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடிய மக்ரோங் அதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் மேற்படி தெரிவித்துள்ளார்.

இதன்போது, ‘ ஆரம்பத்திலிந்தே பிரான்ஸ் உங்களுக்கு ஆதரவாகவே உள்ளது. இந்த ஆதரவு இனியும் தொடரும். ஐரோப்பிய கூட்டமைப்பை வலுப்படுத்த விரும்புகின்றேன். குறிப்பாக ஜேர்மனியுடன் கூட்டமைப்பை வலுப்படுத்த விரும்புகின்றேன்’ என்று தெரிவித்துள்ளார்.

சந்திப்பை தொடர்ந்து தீவிரவாதத்திற்கு எதிரான போரில் ஈடுபட்டுவரும் பிரான்ஸ் படையினரையும் சந்தித்ததுடன் படைமுகாம்களையும் பார்வையிட்டார்.

வடக்கு மாலியை கைப்பற்றிய அல் கொய்தாவுடன் இணைந்த தீவிரவாதிகளை வெளியேற்றும் நடவடிக்கையில் கடந்த 2013 ஆம் ஆண்டு பிரான்ஸ் தலையிட்டது. இஸ்லாமிய தீவிரவாதிகளை வெளியேற்றும் நடவடிக்கையில் பஹ்ரேன் படைகள் என அழைக்கப்படும் 4000 படையினரை பிரான்ஸ் அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

தொடர்புடைய செய்திகள்