Home / உலகம் / ஜேர்மனி /

NAFTA மறு பேச்சுவார்த்தை தொடர்பில் ஜேர்மனிய நிறுவனங்கள் கவலை

Posted On : May 20, 2017

வட அமெரிக்க சுதந்திரவர்த்தக உடன்படிக்கை (NAFTA)  குறித்த மறு பேச்சுவார்த்தை தொடர்பில் ஜேர்மனிய நிறுவனங்கள் கவலைகொண்டுள்ளதாக ஜேர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர் சிக்மர் கப்ரியல் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு மேலும் நன்மையளிக்கக் கூடிய வகையிலான வடஅமெரிக்க சுதந்திரவர்த்தக உடன்படிக்கை குறித்த மறு பேச்சுவார்த்தையை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை அறிவித்தது.

இந்நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) மெக்சிகோவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜேர்மனிய வெளியுறவுத்துறை அமைச்சர் வடஅமெரிக்க சுதந்திரவர்த்தக உடன்படிக்கை தொடர்பிலான மெக்சிகோ மற்றும் கனேடிய அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை தாம் ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘வடஅமெரிக்க சுதந்திரவர்த்தக உடன்படிக்கையானது அமெரிக்காவின் நலன்களில் தங்கியுள்ளது.  இந்த சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கனடா மற்றும் மெக்சிகோவுக்கு மட்டுமின்றி அமெரிக்காவுக்கும் பயனளிக்கின்றது’ என தெரிவித்துள்ளார்.

Comments

தொடர்புடைய செய்திகள்