Home / உலகம் / பிரான்ஸ் /

பிரான்ஸ் ஜனாதிபதியை பற்றி இப்படி கூறலாமா? பத்திரிகையாளருக்கு கடும் கண்டனம்

Posted On : May 23, 2017

பிரான்ஸ் ஜனாதிபதியான இம்மானுவேல் மேக்ரான் மற்றும் அந்நாட்டு முன்னாள் மன்னரான நெப்போலியன் ஆகிய இருவரையும் ஒப்பிட்டு பத்திரிகையாளர் ஒருவர் இழிவாக பேசியுள்ளது கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் புதிய ஜனாதிபதியான இம்மானுவேல் மேக்ரான் தன்னை விட 24 வயது மூத்தவரான பிரிஜ்ஜெட் என்ற ஆசிரியை திருமணம் செய்துகொண்டுள்ளது தற்போது காரசாரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் பிரபல பத்திரிகையாளரான Eric Brunet என்பவர் அண்மையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார்.

அப்போது, ‘பிரான்ஸ் நாட்டின் முன்னாள் மன்னரான நெப்போலியன் மற்றும் தற்போதைய ஜனாதிபதியான இம்மானுவேல் மேக்ரான் ஆகிய இருவருக்கும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன.

பிரான்ஸ் நாட்டின் இளம் வயது மன்னராக நெப்போலியன் போனபர்ட் பதவியேற்றார். அதே போல், இம்மாமுவேல் மேக்ரானும் தனது 39 வயதிலேயே ஜனாதிபதி பதவியை அடைந்துள்ளார்.

மேலும், தன்னை விட 6 வயது மூத்தவரான Josephine de Beauharnais என்பவரை நெப்போலியன் திருமணம் செய்துக்கொண்டார். அதேபோல், தன்னை விட 24 வயது மூத்தவரான பிரிஜ்ஜெட்டை மேக்ரான் திருமணம் செய்துள்ளார்.

நெப்போலியனுக்கும் மேக்ரானுக்கும் மூத்த வயதுள்ளவர்களை விரும்பும் குணம் இருக்கிறது’ என Eric Brunet விமர்சனம் செய்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஜனாதிபதியையும் அவரது மனைவியையும் அவமதிக்கும் வகையில் பேசிய பத்திரிகையாளருக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

நிகழ்ச்சியில் பங்கேற்ற பிற விருந்தினர்களும் பத்திரிகையாளரின் கருத்தை கடுமையாக கண்டித்தனர்.

இதனை தொடர்ந்து, தான் கூறியது தவறான கருத்து என வருந்திய பத்திரிகையாளர் அனைவரிடம் மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளார்.

Comments

தொடர்புடைய செய்திகள்