Home / உலகம் / கனடா /

கல்லூரி மாணவர்களுடன் புகைப்படம் எடுத்த கனேடியப் பிரதமர்

Posted On : May 24, 2017

பிரதமர் என்ற பந்தா இல்லாமல் சாதாரணமானவர்களைப் போல சாலையில் நடைப்பயணம் சென்ற கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, மாணவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

கனடாவில் உள்ள வான்கூவர் நகரில் தனியார் பள்ளியை சேர்ந்த குழுவினர் படப்பிடிப்பு ஒன்றில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அந்த வழியாக  பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நடைப்பயணம் சென்றுள்ளார்.

அவரை அடையாளம் கண்ட சிலர் அவரிடம் சென்று புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்கள். அக்கோரிக்கையை ஏற்றுக் கொண்ட பிரதமர் அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளார்.

இது குறித்து அங்கிருந்த பள்ளி மாணவர் கான்ஸ்டன்டைன் மராகோஸ் கூறுகையில், “நாங்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது பிரதமர் அந்த பக்கமாக நடைப் பயணம் செய்வதைக் கண்டோம். முதலில் எனக்கு ஒரு சந்தேகம் எழுந்தது இங்கு பிரதமர் ஏன் வருகிறார் என வியப்பாக இருந்தது.

பிரதமர் தான் என உறுதிப் படுத்திய பின்னர் அவரிடம் சென்று அவரை எங்களுடன் புகைப்படம் எடுப்பதற்கு கேட்டோம்.  அவர் உடனே ஒப்புக்கொண்டார். இது எங்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது“ என அவர் கூறியுள்ளார்.

அங்கு எடுக்கப்பட்ட புகைப்படத்தை பிரதமரின் போட்டோகிராபர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். கடந்த வருடம் பூங்காவில் சிறுவன் ஒருவனுடன் ஜஸ்டின் ட்ரூடோ எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Comments

தொடர்புடைய செய்திகள்