Home / உலகம் / கனடா /

வெள்ளப் பாதிப்பிலிருந்து மீளமுடியாது தவிக்கும் கியூபெக் மக்கள்

Posted On : May 24, 2017

கடும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில் வீடுகளிலிருந்து வெளியேறிய கனடாவின் கியூபெக் மற்றும் மொன்றியல் நகர மக்கள், தொடர்ந்தும் வீடுகளுக்கு செல்ல முடியாத நிலையில் தவித்து வருகின்றனர்.

அதன்படி கியூபெக் நகரில் 5 ஆயிரம் குடும்பத்தாரும், மொன்றியலில் 60 குடும்பத்தினரும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக கனடா செஞ்சிலுவை சங்கம் அறிவித்துள்ளது.

கியூபெக்கை பல தசாப்த காலங்களுக்கு பின்னர் இத்தகைய பாரிய வெள்ள அனர்த்தம் நிலைகுலைய வைத்திருந்த நிலையில், அங்கு அவசர காலநிலையும் பிரகடனப்படுத்தப்பட்டது.

வெள்ளப் பெருக்கால் பாடசாலைகள் மற்றும் அரச நிறுவனங்கள் யாவும் மூடப்பட்டிருந்ததுடன், சுமார் 124 கியூபெக் நகராட்சிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

தொடர்புடைய செய்திகள்