Home / உலகம் / கனடா /

கனடா பிரதமரின் மனைவிக்கு மிரட்டல் விடுத்த பெண் கைது

Posted On : May 25, 2017

கனடா நாட்டின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவிக்கு மிரட்டல் விடுத்த பெண் ஒருவர் அந்நாட்டு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் Sophie Gregoire Trudeau ஆகிய தம்பதி கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் செய்ததை தொடர்ந்து இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர்.

அரசியல் ரீதியாக பிரதமருக்கு மிரட்டல்கள் வருவது வழக்கம். ஆனால், முதன் முதலாக பிரதமரின் மனைவிக்கு பெண் ஒருவர் சமூக வலைத்தளம் மூலமாக மிரட்டல் விடுத்துள்ளார்.

சமூக வலைத்தளத்தில் வெளியான அப்பதிவில் பிரதமரின் மனைவியையும், பிரதமரின் அரசாங்கத்தையும் அவமதிக்கும் வகையிலும் மிரட்டும் வகையில் தகவல் வெளிடப்பட்டுள்ளது.

பதவினை ஆராய்ந்த பொலிசார் முகவரி சேகரித்துள்ளனர். அல்பேர்ட்டா மாகாணத்தில் உள்ள Lethbridge நகரை சேர்ந்த Lisa Seymour-Peters(49) என்ற பெண் தான் இந்த மிரட்டலை விடுத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பொலிசார் பெண்ணை கைது செய்து விசாரணை செய்துள்ளனர். ஆனால், இதுவரை எந்த தகவலையும் பொலிசார் வெளியிடவில்லை.

எனினும், தற்போது கைது செய்யப்பட்ட பெண்ணை பொலிசார் சில நிபந்தனைகள் அடிப்படையில் விடுதலை செய்துள்ளனர்.

பிரதமரின் மனைவி மற்றும் அவர்களது உறவினர்கள் யாருடனும் 100 மீற்றர் இடைவெளிக்குள் சந்திக்க கூடாது.

மேலும், பிரதமர் மற்றும் அவருடைய மனைவி பங்கேற்கும் அரசியல் மற்றும் பொதுநிகழ்ச்சிகளுக்கு செல்லக் கூடாது என அப்பெண்ணிற்கு பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பிரதமரின் மனைவிக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக எதிர்வரும் யூன் 8-ம் திகதி அப்பெண் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments

தொடர்புடைய செய்திகள்