Home / உலகம் / சுவிஸ் /

சிகிச்சை அளிக்க வந்த மருத்துவரை கொன்ற கைதி: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Posted On : May 25, 2017

சுவிட்சர்லாந்து நாட்டில் சிகிச்சை அளிக்க வந்த பெண் மருத்துவர் ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக கைதி ஒருவருக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.

சுவிஸில் உள்ள ஜெனிவா நகரை சேர்ந்த Fabrice A(42) என்ற நபர் 2 பெண்களை கற்பழித்த குற்றத்திற்காக 20 ஆண்டுகள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கைதிக்கு தெரபி சிகிச்சை அளிப்பதற்காக Adeline M(34) என்ற பெண் மருத்துவர் கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சிறைசாலைக்கு சென்றுள்ளார்.

சிறை அதிகாரிகளின் அனுமதி பெற்று கைதியை வெளியே அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க மருத்துவர் தீர்மானித்துள்ளார்.

அனுமதி கிடைத்ததும் இருவரும் வெளியே சென்றுள்ளனர். ஆனால், கைதி கொடூரமான எண்ணங்களுடன் இருந்துள்ளது மருத்துவருக்கு பின்னர் தான் தெரியவந்துள்ளது.

தனிமையான இடத்திற்கு சென்றதும் எதிர்பாராத விதமாக மருத்துவரை தாக்கிய கைதி அவரை ஒரு மரத்தில் கட்டி வைத்துள்ளார்.

பின்னர், பாலியல் ரீதியாக சித்ரவதை செய்து அவருடைய கழுத்த அறுத்து கொலை செய்துள்ளார்.

இச்சம்பவத்திற்கு பின்னர் மீண்டும் கைது செய்யப்பட்ட அந்நபர் கடுமையான பாதுகாப்பில் வைக்கப்பட்டார்.

கைதியை வெளியே அழைத்துச்செல்லும் சட்டவிதிகள் மேலும் கடுமையாக்கப்பட்டன. இந்நிலையில், மருத்துவரை கொலை செய்த வழக்கு நேற்று ஜெனிவா நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தபோது கைதிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

Comments

தொடர்புடைய செய்திகள்