Home / உலகம் / சுவிஸ் /

வைர நகையை ஹொட்டலில் தவறவிட்ட பெண்: அதிர்ஷ்டவசமாக நிகழ்ந்த சம்பவம்

Posted On : May 25, 2017

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஹொட்டல் ஒன்றில் விலையுயர்ந்த வைர நகையை வாடிக்கையாளர் ஒருவர் தவறவிட்டு கடும் முயற்சிக்கு பின்னர் மீண்டும் கிடைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்கவ் நகரில் Hasenberg என்ற சொகுசு ஹொட்டல் ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஹோட்டலுக்கு நேற்று தம்பதி இருவர் உணவருந்து சென்றுள்ளனர்.

பெண் தன்னுடைய கழுத்தில் மிகவும் விலையுயர்ந்த வைர நகையை அணிந்திருந்துள்ளார்.

அப்போது, உணவு வைர நகையில் படக்கூடாது என்பதற்காக நகையை கழட்டி மேஜை மீது வைத்துள்ளார்.

ஆனால், மேஜையில் வைக்கப்பட்ட நகை கை தவறி கீழே இருந்த ஒரு சிறிய துளைக்குள் விழுந்துள்ளது.

சுமார் 1,00,000 பிராங்க் மதிப்புள்ள நகை துளைக்குள் விழுந்து விட்டதை கண்டு பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதுக் குறித்து ஹொட்டல் நிர்வாகத்திடம் தெரிவித்த பின்னர் நகையை எடுக்க கடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், நகையை எடுக்க முடியவில்லை. மேஜை ஜப்பான் கலையில் வடிவமைக்கப்பட்டிருந்ததால் அதனை அப்புறப்படுத்துவதும் கடினமாக இருந்துள்ளது.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து அறிந்த ஹொட்டல் சமையல்காரர் தண்ணீரை உறிஞ்சி எடுக்கும் ஒரு சிறிய ஆயுதத்துடன் அங்கு வந்துள்ளார்.

பின்னர் துளை வழியாக ஆயுதத்தை நுழைத்து உறிஞ்சியுள்ளார். அப்போது, உள்ளே கிடந்த வைர நகை வேகமாக வெளியேறியுள்ளது.

வைர நகை மீண்டும் கிடைத்த மகிழ்ச்சியில் ஹொட்டல் சமையல்காரருக்கு நன்றி தெரிவித்துவிட்டு தம்பதி அங்கிருந்து புறப்பட்டுள்ளனர்.

வாடிக்கையாளருக்கு சரியான நேரத்தில் உதவியை சமையல்காரரை ஹொட்டல் நிர்வாகம் வெகுவாக பாராட்டி உற்சாகப்படுத்தியுள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்