Home / உலகம் / சுவிஸ் /

கொள்ளையடிக்க நுழைந்த நபரை சுட்டுக்கொன்ற வீட்டு உரிமையாளர்

Posted On : May 26, 2017

சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஒருவரின் வீட்டிற்குள் கொள்ளையடிக்க நுழைந்த நபர் பிணமாக திரும்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸ் நாட்டை சேர்ந்த தம்பதி இருவர் பிரான்ஸ் நாட்டிற்கு விடுமுறையை கழிக்க சென்றுள்ளனர். விடுமுறையில் தங்குவதற்காக வாங்கிய வீட்டில் இருவரும் தனியாக தங்கியிருந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று இரவு நேரத்தில் வீட்டில் வினோதமான சத்தம் ஏற்படுவதை கண்டு தம்பதி இருவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உரிமையாளர் உடனடியாக உள்ளே சென்று துப்பாக்கியை எடுத்து வந்துள்ளார். பின்னர், சத்தம் வந்த திசையை நோக்கி நடந்து சென்றுள்ளார்.

மொட்டை மாடிக்கு சென்றபோது அங்கு வாலிபர் ஒருவர் தப்புவதற்காக முயற்சி செய்துக்கொண்டு இருந்துள்ளார்.

நபர் தன்னுடைய வீட்டில் கொள்ளையடிக்க வந்துள்ளார் என உறுதிப்படுத்திய உரிமையாளர் வாலிபரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதில் வாலிபருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. எனினும், அங்கிருந்து அவர் தப்பியுள்ளார்.

இந்நிலையில், இன்று காலை நேரத்தில் உணவகம் ஒன்றின் கூரையில் வாலிபர் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

பொலிசார் நடத்திய விசாரணையில் சுவிஸ் குடிமகன் அவரை துப்பாக்கியால் சுட்டது தெரியவந்துள்ளது.

வீட்டு உரிமையாளரை கைது செய்துள்ள பொலிசார் அவரிடம் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments

தொடர்புடைய செய்திகள்