Home / உலகம் / ஜேர்மனி /

ஜேர்மனிய வர்த்தக கொள்கைகளுக்கு ட்ரம்ப் கண்டனம் தெரிவிக்கவில்லை: ஜேன் கிளாட் ஜங்கர்

Posted On : May 26, 2017

ஜேர்மனிய வர்த்தக கொள்கைகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எத்தகைய கண்டனமும் தெரிவிக்கவில்லை என ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜேன் கிளாட் ஜங்கர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

பிரசல்ஸில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நேட்டோ மாநாட்டில் ஜேர்மனிய வர்த்தக கொள்கைகள் மிகவும் மோசமானவை என்றும் அமெரிக்காவில் ஜேர்மனிய கார்கள் விற்பனையை குறைக்க விரும்புவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்ததாக ஜேர்மனிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்நிலையில் இத்தாலியின் டார்மினா நகரில் நடைபெறும் ஜி-7 மாநாட்டிற்கு முன்னதாக இன்று (வெள்ளிக்கிழமை) கருத்து வெளியிட்டுள்ள ஜேன் கிளாட் ஜங்கர், ஜேர்மனியர்கள் மிகவும் மோசமான நடந்துகொள்வதாக ட்ரம்ப் எதுவும் தெரிவிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பேச்சுவார்த்தைகளில் ஜேர்மனிக்கு எதிராக ட்ரம்ப் தீவிரமாக இருந்தார் என்று ஜேர்மனிய செய்தி ஊடகங்கள் மிகைப்படுத்தி கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார்.

Comments

தொடர்புடைய செய்திகள்