Home / உலகம் / பிரான்ஸ் /

பிரான்ஸ் ஜனாதிபதியை புகழ்ந்த டிரம்ப்

Posted On : May 26, 2017

பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மேக்ரோனை சந்தித்த டொனால்ட் டிரம்ப் உங்கள் வெற்றி குறித்தே உலகம் பேசிக் கொண்டிருக்கிறது என பாராட்டி பேசியுள்ளார்.

அமெரிக்கா ஜனாதிபதி முதன்முறையாக சவுதி அரேபியா, இஸ்ரேல் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்.

இதன் ஒருபகுதியாக பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மேக்ரோனை சந்தித்து பேசினார்.

அப்போது, உங்கள் வெற்றி பற்றியே உலகம் பேசிக் கொண்டிருக்கிறது, ஆச்சரியப்படும் வெற்றி இது என பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

மேலும் நாம் இருவரும் இணைந்து பேசுவதற்கு நிறைய உள்ளது, தீவிரவாதம், பொருளாதாரம் பற்றி பேச வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு மணிநேரத்திற்கும் மேலாக தொடர்ந்த பேச்சுவார்த்தையில், வடகொரியா விவகாரம், உக்ரைன் மற்றும் சிரியா நாடுகள் பற்றி ஜனாதிபதிகள் இருவரும் பேசிக் கொண்டதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Comments

தொடர்புடைய செய்திகள்