Home / உலகம் / ஜேர்மனி /

அமெரிக்காவை நம்பி ஜேர்மனி இல்லை: சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல்

Posted On : May 29, 2017

ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தலைமையிலான அமெரிக்காவை நம்பி ஜேர்மனியின் எதிர்காலம் இல்லை என சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியில் உள்ள பவேரியா நகரில் நேற்று நிகழ்ந்த கூட்டம் ஒன்றில் ஏஞ்சலா மெர்க்கல் பங்கேற்றுள்ளார்.

அப்போது, அமெரிக்கா, பிரித்தானியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவு நமக்கு தேவை தான்.

ஆனால், டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்காவை நம்பி ஜேர்மனியின் எதிர்காலம் இல்லை.

ஐரோப்பிய நாடுகளின் பலம் மற்றும் பலவீனங்களை நாம் மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அமெரிக்காவின் தலையீட்டால் தான் ஐரோப்பிய பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும் என்ற நிலை ஏற்படக்கூடாது.

கடந்த சில நாட்களாக தனக்கு ஏற்பட்ட அனுபங்களில் இந்த உண்மை விளங்கியதாக ஏஞ்சலா மெர்க்கல் பேசியுள்ளார்.

பிரஸ்சல்ஸ் நகரில் பருவநிலை மாற்றம் தொடர்பான ஆலோசனை கூட்டத்தின்போது ‘பாரீஸ் பருவநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஆதரவு அளிப்பது குறித்து முடிவெடுக்க கூடுதல் அவகாசம் தேவை என டொனால்ட் டிரம்ப் கூறியது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

டொனால்ட் டிரம்பின் இப்பேச்சிற்கு பின்னர் ஏஞ்சலா மெர்க்கல் அமெரிக்காவை விமர்சனம் செய்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments

தொடர்புடைய செய்திகள்