Home / உலகம் / ஐரோப்பா /

அமெரிக்கா – பிரித்தானியாவை சார்ந்திருந்த காலம் மாறிவிட்டது: அங்கேலா மேர்க்கல்

Posted On : May 29, 2017

அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளை ஐரோப்பா இனிமேலும் சார்ந்திருக்கக் கூடாது என ஜேர்மனிய அதிபர் அங்கேலா மேர்க்கல் இன்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளார்.

குறித்த நாடுகளுடன் நல்லுறவை பேணவே ஜேர்மனி விரும்பியதாகவும் ஆனால் இனிமேல் தனது நலனை மாத்திரம் கருத்திற்கொண்டு ஜேர்மனி செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இத்தாலியில் நேற்று முன்தினம் நிறைவடைந்த ஜி – 7 உச்சிமாநாட்டின் போது காலநிலை மாற்றம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்காததை தொடர்ந்தே மேர்க்கல் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மியூனிக் நகரிலிருந்து உரையாற்றுகையில், “ஏனைய நாடுகளை சார்ந்திருந்த காலம் மாறும் நிலை தற்போது வந்துவிட்டது. ஜேர்மனி மற்றும் பிரான்ஸின் புதிய ஜனாதிபதிக்கு இடையிலான உறவுகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்” என தெரிவித்தார்.

ஜேர்மனியில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு மியூனிக்கில் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Comments

தொடர்புடைய செய்திகள்
பிரதான செய்திகள்