Home / உலகம் / பிரான்ஸ் /

பிரான்ஸிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் ரஷ்ய ஜனாதிபதி

Posted On : May 29, 2017

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இன்று (திங்கட்கிழமை) பிரான்ஸின் வர்சைல் மாளிகைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இவரை வரவேற்கும் பொருட்டு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோங் தயாரான நிலையில் இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவுகள் 300 ஆண்டுகளாக தொடர்வதை கௌரவப்படுத்தும் வகையில் கண்காட்சி ஒன்று ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த நிகழ்வில் கலந்துகொள்ளும் பொருட்டே புடின் பிரான்ஸிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இரு தலைவர்களும் சிரியாவில் தொடரும் யுத்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் தேர்தலில் மக்ரோங் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இனிவருங்காலங்களில் அவருடன் ஒத்துழைத்து செயலாற்றவுள்ளதாக புடின் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிரியா தொடர்பில் மாத்திரமே தான் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஹோலன்ட் தெரிவித்ததை தொடர்ந்து, குறித்த இரு நாடுகளுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன. எனினும், அதனை புறந்தள்ளி புடின் தற்போது பிரான்ஸிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

தொடர்புடைய செய்திகள்