Home / உலகம் / சுவிஸ் /

விமான நிலையத்தில் மோசமான விபத்து தவிர்ப்பு: உயிர் தப்பிய பயணிகள்

Posted On : May 30, 2017

சுவிட்சர்லாந்து நாட்டில் பயணிகள் விமானத்திற்கு மிக அருகில் ட்ரோன் என்ற சிறிய ரக விமானம் பறந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸில் உள்ள சூரிச் விமான நிலையத்திற்கு அருகில் தான் இந்த பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

விமான நிலையங்களுக்கு அருகில் ட்ரோன் எனப்படும் சிறைய ரக விமானங்களை பறக்க விடக்கூடாது என்ற விதிமுறை நடைமுறையில் இருந்து வருகிறது.

ஆனால் இதனை மீறி விமான நிலையங்களுக்கு அருகில் ட்ரோன் விமானங்களை பறக்கவிடும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அதிகாலை 6.15 மணியளவில் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஏர்பஸ் A330 என்ற பயணிகள் விமானம் சூரிச் விமான நிலையத்தை நோக்கி தாழ்வாக பறந்து வந்துள்ளது.

அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென ட்ரோன் விமானம் பயணிகள் விமானத்திற்கு மிக அருகில் பறந்துள்ளது.

விமான நிலையத்தை அடைவதற்கு சில கி.மீ தூரத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. எனினும், சாமர்த்தியமாக செயல்ப்பட்ட விமானி ட்ரோன் மீது மோதாமல் விமானத்தை பத்திரமாக தரையிறக்கியுள்ளார்.

இதனால் மிக மோசமான விமான விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்திற்கு அருகில் ட்ரோன் விமானத்தை செலுத்தியது தொடர்பாக விமான நிலைய பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments

தொடர்புடைய செய்திகள்