Home / செய்திகள் / இந்தியச் செய்திகள் /

இந்தியா- ஜேர்மனி இடையே 12 ஒப்பந்தங்கள் கையெழுத்து

Posted On : May 31, 2017

ஜேர்மனி, ஸ்பெயின், ரஷ்யா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு ஆறுநாள் சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரதமர் மோடி நேற்று முன்தினம் பெர்லினை சென்றடைந்தார்.

நேற்று ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கலை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

வர்த்தகம், திறன் மேம்பாடு, பருவநிலை மாற்றம் குறித்து இருநாட்டு தலைவர்களும் கலந்துரையாடினர்.

இதனை தொடர்ந்து இந்தியா- ஜேர்மனி இடையே 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மோடி, இந்தியாவுக்கும், ஜேர்மனிக்கும் இடையேயான பொருளாதார உறவில் மிகப்பெரிய முன்னேற்றத்தை காண முடியும்.

இந்தியாவை சக்திவாய்ந்த தோழமை நாடாகவே ஜேர்மனி பார்த்து வருகிறது.

இரு தரப்பு ஒத்துழைப்பானது விளையாட்டு துறையிலும் விரிவாக்கப்படும், எதிர்கால தலைமுறையின் பாரிய பிரச்சனையாக விளங்குவது தீவிரவாதம். இதனை எதிர்த்து போராட அனைத்து சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.

Comments

தொடர்புடைய செய்திகள்