Home / உலகம் / சுவிஸ் /

தண்டவாளத்தில் நின்று தற்கொலைக்கு முயன்ற சிறுமி: அடுத்தடுத்து நிகழ்ந்த அதிசயம்

Posted On : June 2, 2017

சுவிட்சர்லாந்து நாட்டில் தண்டவாளத்தில் நின்று தற்கொலைக்கு முயன்ற சிறுமியை நபர் ஒருவர் பெரும் போராட்டத்திற்கு பின்னர் காப்பாற்றியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸின் பேர்ன் மாகாணத்தில் உள்ள லிஸ் ரயில் நிலையத்தில் தான் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நேற்று காலை 7.30 மணியளவில் Mustafa Karasahin(36) என்ற நபர் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது, நிலையத்திற்கு வந்த 15 வயது சிறுமி ஒருவர் வேகமாக சென்று தண்டவாளத்திற்கு மத்தியில் நின்றுள்ளார். தூரத்தில் ரயில் ஒன்று வேகமாக வந்துக்கொண்டு இருந்துள்ளது.

இக்காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்த நபர் விரைந்து சென்று சிறுமியை பிடித்து இழுத்து வந்துள்ளார்.

காப்பாற்றப்பட்டதை உணர்ந்த அச்சிறுமி நபரை தாக்கிவிட்டு மற்றொரு தண்டவாளத்தில் நின்றுள்ளார்.

இந்நிகழ்வை கண்ட சிலர் உதவிக்கு வரமால் இக்காட்சியை தங்களது செல்போன்களில் படம் பிடித்துக்கொண்டு இருந்துள்ளனர்.

சில வினாடிகளில் அந்த தண்டவாளத்திலும் ஒரு ரயில் வந்துள்ளது. ஆனால் ,அதிர்ஷ்டவசமாக ரயில் தூரத்திலேயே நிறுத்தப்பட்டது.

சிறுமியை காப்பாற்றிய நபர் அவரை கட்டாயப்படுத்தி வெளியே அழைத்து சென்று பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார்.

பொலிசார் நடத்திய விசாரணையில் சிறுமி தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. சரியான நேரத்தில் சிறுமியை காப்பாற்றிய நபரை பொலிசார் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

Comments

தொடர்புடைய செய்திகள்