Home / உலகம் / பிரான்ஸ் /

பிரான்ஸில் அறிமுகமாகும் புதிய சட்டம்: பொதுமக்கள் வரவேற்பு

Posted On : June 2, 2017

பிரான்ஸ் நாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது குடும்பத்தை சேர்ந்தவர்கள் மற்றும் உறவினர்களை அமர்த்த தடை விதிக்கும் புதிய சட்டம் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரான்ஸ் நாட்டின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள இம்மானுவேல் மேக்ரான் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார்.

இவற்றில் ஒன்றாக தற்போது நாடாளுமன்றத்தில் ஒரு புதிய சட்ட மசோதாவை தாக்கல் செய்துள்ளார்.

இதில் ‘நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களை நாடாளுமன்ற பொறுப்புகளில் அமர்த்த தடை விதிப்பதாக’ தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்ட Francois Fillon என்பவர் தனது உதவியாளராக மனைவியை நியமித்து பெருமளவில் பணத்தை செலவிட்டதை தொடர்ந்து இவ்விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதியின் இந்த மசோதாவை அவரது சட்ட அமைச்சரான Francois Bayrou என்பவர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

இதுமட்டுமில்லாமல், ஊழல் தொடர்பான குற்றச்சாட்டில் நிரூபிக்கப்பட்ட நபர்கள் 10 ஆண்டுகளுக்கு பின்னர் மட்டுமே தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற சட்ட மசோதாவும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

புதிய ஜனாதிபதியின் இந்த அதிரடி திட்டத்திற்கு அந்நாட்டு மக்கள் அமோகமாக வரவேற்பு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

தொடர்புடைய செய்திகள்