Home / உலகம் / பிரித்தானியா /

மான்செஸ்டர் தாக்குதலுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி: 6 நிமிடத்தில் விற்று தீர்ந்த டிக்கெட்கள்

Posted On : June 2, 2017

மான்செஸ்டர் வெடிகுண்டு தாக்குதலில் பாதிப்படைந்தோருக்கு நிதி திரட்ட நடைபெறும் ஒன் லவ் மான்செஸ்டர் இசை நிகழ்ச்சியின் டிக்கெட்கள் வெறும் 6 நிமிடங்களில் விற்று தீர்ந்துள்ளன.

பிரித்தானியாவின் மான்செஸ்டரில் கடந்த 22ஆம் திகதி பொப் பாடகி அரினா கிராண்டியின் இசைக் கச்சேரியில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.

இந்த தாக்குதலில் 22 பேர் பலியானார்கள், 100க்கும் மேற்பட்டோர் காயடைந்தனர்.

இந்நிலையில் வெடிகுண்டு தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு நிதி திரட்ட இசைக் கச்சேரி நடத்தத் திட்டமிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை அரினா கிராண்டி மற்றும் பிரபல இசைக் கலைஞர்கள் ஜஸ்டின் பீபர், கேட்டி பெர்ரி, மைலி சைரஸ் ஆகியோர் இணைந்து நடத்தவுள்ளனர்.

மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்டு மைதானத்தில் வரும் 4ஆம் திகதி இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இந்த இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்கள் விற்பனை தொடங்கிய 6 நிமிடங்களில், மொத்தமும் விற்று தீர்ந்துள்ளது.

நேற்று காலை டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கியுள்ளது, விற்பனை தொடங்கிய 6 நிமிடங்களில் 45,000 டிக்கெட்டுகள் விற்றுள்ளதாக கூறப்படுகிறது.

Comments

தொடர்புடைய செய்திகள்