Home / ஜோதிடம் /

எந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசுவது நல்லது ஜோதிட கலை சொல்லும் சூட்சமம்!

Posted On : June 3, 2017

ஜோதிடம் என்பது மிக அருமையான கலை மனிதனின் ஒவ்வொரு நடவடிக்கையைப் பற்றியும் மிகத் தெளிவாகக் கூறுகிறது  என இக்கலையைப் பற்றி மிக பழமையான நூல்கள் தெரிவிக்கின்றது.

மேஷம் – ராசிக்காரங்க கிட்ட எச்சரிக்கையா பேசனும். பாராட்டி பேசலாம் ஆனா வாக்குவாதம் செய்யக்கூடாது.
ரிஷபம் – ராசிக்காரங்க கிட்ட கனிவா பக்குவமா பேசனும்.
மிதுனம் – ராசிக்காரங்க கிட்ட அதிகமா வெச்சிக்காதீங்க. லைட்டா பேசுவாங்க ஹெவியா உங்களை ஆராய்ச்சி பண்ணுவாங்க.
கடகம் – ராசிக்காரங்ககிட்ட பாசமா பேசலாம் எல்லா உதவியும் கிடைக்கும்.
சிம்ம ராசி – சிம்ம ராசிக்காரங்கக்கிட்ட பொறுமையா பேசனும். டபடன்னு பேசிட்டு போய்ட்டே இருப்பாங்க..நேர்மையா  பேசலைன்னா கட்டம் கட்டிடுவாங்க.
கன்னி – ராசிக்காரங்க நட்பை முறிச்சிக்க கூடாது அவர்களால் நிறைய ஆதாயம் உண்டு அதுவே உத்திரம் கன்னின்னா கொஞ்சம்  எச்சரிக்கையா பார்த்து பேசுங்க.
துலாம் – ராசின்னா ஜாலியா பேசலாம். சுவாதி கம்பீரமா நடந்துக்குவாங்க. கொஞ்சம் கவனமா இருங்க. உங்களை எடை போட்டு  நீங்க இவ்வளவுதான்னு மார்க் போட்ருவாங்க.
விருச்சிகம் – அன்பா அனுசுரனையா பேசலாம். கொஞ்சம் சால்ட்டா கிண்டலடிச்சா நீங்க வாழ்க்கையில வாங்காத நோஸ்கட்  வாங்கிக்குவீங்க. அன்புல தென்றல். கோபத்துல சுனாமி.
தனுசு – ராசிக்காரங்க கிட்ட அன்பா பேசி காரியம் சாதிக்கலாம். நாலு வார்த்தை பாராட்டுங்க. அன்புக்கு நான் அடிமை என்பது  தனுசுவின் குணம்.
மகரம் ராசி – மகரம் ராசிக்காரங்க நிறைய புலம்புவாங்க. அப்படியே நம்ப வேண்டாம். அவங்க இயல்பு அது. கடுமையான  உழைப்பாளிகள் பேச்சுதான் முன்ன பின்ன இருக்கும்.
கும்பம் – அடுத்த அம்பானி இவர்தான்னு நம்புற மாதிரி பேசுவாங்க. உம் கொட்டிட்டு நீங்களும் உங்க சாதனைகளை  சொல்லுங்க.
மீனம் – அசந்தா ஆத்துல இல்ல காத்துல கூட மீன் பிடிப்பாங்க..மத்தவங்க ரகசியங்கள் எல்லாம் இவர்கிட்ட தெரிஞ்சிக்கலாம்.

Comments

தொடர்புடைய செய்திகள்