Home / உலகம் / அவுஸ்ரேலியா /

அமெரிக்க – அவுஸ்ரேலிய தலைவர்கள் சிட்னியில் சந்திப்பு

Posted On : June 5, 2017

அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் (Rex Tillerson) மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மாட்டிஸ் (James Mattis) ஆகியோர் அவுஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் மரைஸ் பெய்ன் (Marise Payne) மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜூலி பிஷப் (Julie Bishop) ஆகியோரை நேரில் சந்தித்துள்ளனர்.

குறித்த சந்திப்பு இன்று (திங்கட்கிழமை) அவுஸ்ரேலியத் தலைநகர் சிட்னியில் (Sydney) நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது பல நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள காலநிலை மாற்ற விவகாரம் மற்றும் பாதுகாப்பு ஆகிய விடயங்கள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் நியூ சௌத் வேல்ஸ் அரச மாளிகையில் நடைபெற்றதென தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவுஸ்ரேலியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான குறித்த அமைச்சரவை ஆலோசனை முறைமை சுமார் 30 வருடங்களுக்கு முன்னதாக ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த முறைமையின் கீழ் அவுஸ்ரேலியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான பாதுகாப்பு, மூலோபாய விடயங்கள் மற்றும் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் என்பன இதுவரைக்காலமும்   முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

தொடர்புடைய செய்திகள்