Home / உலகம் / கனடா /

கனடா- பிரம்டன் பகுதியில் துப்பாக்கிச் சூடு!

Posted On : June 5, 2017

பிரம்டனின் கிழக்கே Gore  வீதி மற்றும் Ebenezer  வீதிப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவமானது, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நான்கு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பீல் பிராந்திய பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இச்சம்பவத்தில் 38 வயதான ஆண் ஒருவர் காயங்களுடன் உயிராபத்தான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சம்பவம் இடம்பெற்ற இடத்தில் மோட்டார் சைக்கிள்களுடன் சிலர் நின்று கொண்டிருந்ததாகவும், பின்னர் அங்கு திடீரென துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும், நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் இச்சம்பவத்தை தொடர்ந்து குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்தோர் பீல் பிராந்திய பொலிஸாரை தொடர்புக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது

Comments

தொடர்புடைய செய்திகள்