Home / உலகம் / ஜேர்மனி /

ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் துருக்கிக்கு விஜயம்

Posted On : June 5, 2017

ஜேர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர் சிக்மார் கேப்ரியல் (Sigmar Gabriel), இன்று (திங்கட்கிழமை) துருக்கிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.

துருக்கியின் இன்சர்லிக் விமானத் தளத்தில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஜேர்மனிய துருப்புக்களை ஜேர்மனிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று பார்வையிட துருக்கி மறுப்பு தெரிவித்து வரும் விவகாரம் தொடர்பில் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், துருக்கி மற்றும் ஜேர்மனுக்கு இடையில் உள்ள இருதரப்பு உறவுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறித்த விஜயத்தை மேற்கொள்வதற்கு முன்னர், இந்த விடயம் தொடர்பில் ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவித்திருந்த சிக்மார் கேப்ரியல், “ஜேர்மனிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்சர்லிக் விமானத் தளத்திற்குச் செல்ல அனுமதி மறுக்கப்படுவதற்கான காரணம் துருக்கியின் உள்நாட்டு அரசியல் காரணங்கள் எனின், துருக்கியில் உள்ள ஜேர்மனிய துருப்புக்கள் அமைதியான முறையில் அங்கிருந்து மீளப்பெறப்படுவர்” என தெரிவித்திருந்தார்.

Comments

தொடர்புடைய செய்திகள்