Home / உலகம் / கனடா /

தந்தையின் விடுதலைக்காக கனேடிய பிரதமரின் உதவியை நாடும் பிள்ளைகள்

Posted On : June 5, 2017

சவுதி அரேபியா சிறையில் அடைக்கப்பட்டுள்ள Raif Badawi என்ற நபரை காப்பாற்ற உதவி செய்யுமாறு கைது செய்யப்பட்ட நபரின் 3 பிள்ளைகள் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோவிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சர்வதேச மன்னிப்பு சபையான அம்னாஸ்ட்டியின் இணையத்தளத்தில் இவர்கள் தொடர்பான காணொளி ஒன்று வெளிடப்பட்டுள்ளது. அதில் ‘தந்தையை பார்த்து 5 ஆண்டுகள் கடந்துவிட்டதாகவும், தயவு செய்து சவுதி அரேபியா மன்னரை தொடர்புக்கொண்டு எங்களது தந்தையை விடுதலை செய்ய உதவ வேண்டும்’ என கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்விவகாரத்தில் கனேடிய பிரதமர் மௌனம் காத்து வருவதற்கு அம்னாஸ்ட்டியும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. எனினும், இதுவரை கனேடிய பிரதமர் இவ்விவகாரத்தில் எவ்வித முடிவுகளையும் எடுக்கவில்லை.

எதிர்வரும் யூன் 17ஆம் திகதி படாவி கைது செய்யப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைவதால் மாண்டீரியல் நகரில் நிகழ்ச்சி ஒன்றிற்கு அம்னாஸ்ட்டி ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

சவுதி அரேபியா மதக்குருக்களை விமர்சனம் செய்த குற்றத்திற்காக Raif Badawi  கடந்த 2012ஆம் ஆண்டு யூன் 17ஆம் திகதி கைது செய்யப்பட்டார். இவரது குற்றத்திற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1,000 கசையடிகளையும் தண்டனையாக நீதிமன்றம் அளித்துள்ள நிலையில், இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவரின மனைவி மற்றும் 3 பிள்ளைகளும் கனடா பிரஜை இல்லை என்றபோதும், அவர்கள் தற்போது கியூபெக் மாகாணத்தில் உள்ள Sherbrooke நகரில் வசித்து வருகின்ற நிலையில் பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments

தொடர்புடைய செய்திகள்