Home / உலகம் / கனடா /

தமிழ் மொழியிலும் கனடா தேசிய கீதம்

Posted On : June 5, 2017

கனடாவின் சுதந்திர தினத்தன்று தமிழ் மொழி உட்பட மொத்தம் 12 மொழிகளில் கனடா தேசிய கீதம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் 150 ஆவது சுதந்திர தினம் எதிர்வரும் யூலை 1ஆம் திகதி கொண்டாடப்பட உள்ள நிலையில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன்படி, தமிழ் , அரேபி, அமெரிக்க சைகை மொழி, கிரேக்கம், ஆங்கிலம், பிரஞ்சு, ஜேர்மன், இத்தாலியன், சீன மான்டரின், பஞ்சாபி, ஸ்பானிஷ், டாகாலோக் ஆகிய 12 மொழிகளில் இசைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழ் மொழியாக்கத்தை கவிஞர் கந்தவனம் இயக்கியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதுவரை காலம், ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழியில் மட்டுமே இருந்த கனடா தேசிய கீதம் இசைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

தொடர்புடைய செய்திகள்