Home / உலகம் / பிரித்தானியா /

தாக்குதல்தாரிகளின் பெயர்கள் விரைவில் வெளியிடப்படும்: லண்டன் பொலிஸார்

Posted On : June 5, 2017

லண்டனில் தாக்குதல்களை நடத்தி அப்பாவி பொதுமக்கள் 7 பேரை படுகொலை செய்த மூவரின் பெயர் விபரங்கள் தெரியவந்துள்ளதாகவும், அவை விரைவில் வெளியிடப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மூவர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், இன்று (திங்கட்கிழமை) நியூஹாம் (Newham) மற்றும் பார்க்கிங் (Barking) ஆகிய பகுதிகளில் குறிப்பிட்ட சில முகவரிகளில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானியாவை உலுக்கியுள்ள குறித்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். தாக்குதல்களில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், 48 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் தாக்குதல் நடத்திய மூவரும் அடங்குகின்றனர்.

 

Comments

தொடர்புடைய செய்திகள்