Home / உலகம் / பிரித்தானியா /

பிரித்தானியாவுக்கு உதவ அமெரிக்கா எப்போதும் தயங்காது: ட்ரம்ப்

Posted On : June 5, 2017

லண்டன் தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கும், பயங்கரவாத தாக்குதல்களினால் அதிர்ந்து போயுள்ள பிரித்தானியாவுக்கு உதவி புரிவதற்கும் அமெரிக்கா தயங்காது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார்.

அமெரிக்கத் தலைநகர் வொஷிங்டன் டி.சியில் லண்டன் தாக்குதல்கள் தொடர்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், “நமது மண்ணில் அப்பாவி மக்களின் இரத்தம் சிந்தப்படுவது தடுக்கப்பட வேண்டும். தீவிரவாதம் எனும் கொடிய நோய் பரவாமல் இருக்க நாம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அது தொடர்பில் அனைத்து வழிமுறைகளையும் கையாள அமெரிக்கா உறுதி பூண்டுள்ளது” என தெரிவித்தார்.

நேற்று முன்தினம் லண்டன் பிரிட்ஜ் மற்றும் பரோ ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 7 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், 48க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Comments

தொடர்புடைய செய்திகள்