Home / உலகம் / கனடா /

முதியவர்களை கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

Posted On : June 5, 2017

கனடாவில் 8 முதியவர்களை கொலை செய்த குற்றத்திற்காக செவிலியப் பெண் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்ட போது செவிலியர் அனைத்துக் குற்றங்களையும் ஒப்புக்கொண்டுள்ளார்.

எனவே கொலையாளி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவருக்கு 25 ஆண்டுகள் வரை வெளியே வர முடியாத ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒன்டாரியோ மாகாணத்திலுள்ள மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வரும் Elizabeth Wettlaufer என்ற பெண், கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனாலேயே அவர் தனது கண்காணிப்பிற்கு வரும் நோயாளிகளிடம் மோசமாக நடந்து கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

2007 – 2014  ஆண்டு காலப்பகுதியில் குறித்த செவிலியப் பெண்ணின் கண்காணிப்பின் கீழ் இருந்த 8 நோயாளிகள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்.  இந்த விவகாரம் வெளிவந்ததை அடுத்து, குறித்த பெண் கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டார்.

Comments

தொடர்புடைய செய்திகள்