Home / உலகம் / பிரித்தானியா /

லண்டனில் தீவிரவாதிகள் தாக்குதல் : ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பு

Posted On : June 5, 2017

லண்டனில் தேம்ஸ் நதி பாலத்தில் கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட தீவிரவாதிகள் தாக்குதலில் 7 பேர் கொள்ளப்பட்டனர். மேலும் 40 பேர் படுகாயமடைந்தனர். பெரும் அதிர்ச்சிக்குள்ளாகிய இந்த தாக்குதலுக்கு காரணமான 3 தீவிரவாதிகளும் சுட்டு கொல்லப்பட்டனர். மேலும் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இங்கிலாந்து முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் லண்டன் தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்று கொண்டுள்ளது.

இதனிடையே லண்டன் தாக்குதல் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள ஈபிள் டவர் விளக்குகள் அணைக்கப்பட்டன. இதேபோல் மான்செஸ்டர் நகரில் கடந்த மாதம் நடைக்பெற்ற தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இசை அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை இல்லாத வகையில் பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டிருந்தது.

Comments

தொடர்புடைய செய்திகள்