Home / உலகம் / பிரித்தானியா /

லண்டன் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல்: இருண்டது ஈபிள் கோபுரம்

Posted On : June 5, 2017

லண்டன் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், இன்று (திங்கட்கிழமை) காலை பிரான்ஸ் தலைநகர் பரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டன.

இன்று ஈபிள் கோபுர விளக்குகள் அணைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்படும் என நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ட்விட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.

பிரித்தானியாவில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தாக்குதலில் 10 பேர் உயிரிழந்ததுடன், 48பேர் காயமடைந்தனர். குறித்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

தொடர்புடைய செய்திகள்