Home / உலகம் / பிரித்தானியா /

லண்டன் தாக்குதல்: விரைவில் அவசர கூட்டம்

Posted On : June 5, 2017

லண்டனில் நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, அதற்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்து கலந்துரையாட பிரித்தானிய அமைச்சர்கள் இன்று (திங்கட்கிழமை) ஒன்றுகூடவுள்ளனர்.

குறித்த கூட்டம் பிரதமர் தெரேசா மே தலைமையில் ஆரம்பமாகவுள்ள நிலையில் அதில் லண்டன் மேயர் உட்பட புலனாய்வு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளதாகவும்   தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் இதுவரை 12 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று மாத காலத்திற்குள் பிரித்தானியாவில் நடத்தப்பட்ட மூன்றாவது தாக்குதல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Comments

தொடர்புடைய செய்திகள்