Home / உலகம் / பிரித்தானியா /

லண்டன் பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஐ.எஸ். பொறுப்பேற்பு

Posted On : June 5, 2017

பிரித்தானிய பொதுத் தேர்தல் 8 ஆம் திகதி நடைபெறவுள்ளநிலையில், மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ள பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

தாமே இத்தாக்குதல்களை மேற்கொண்டதாக ஐ.எஸ். தீவிரவாதிகளின் முகவரான அமாக்கினால் (Amaq) நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது.

நேற்று முன்தினம் இரவு லண்டன் பிரிட்ஜ் பகுதியில் நுழைந்த மூன்று ஐ.எஸ். பயங்கரவாதிகள் அங்கிருந்த பொதுமக்களை வெள்ளை வான் ஒன்றைக்கொண்டு மோதிச் சாய்த்ததுடன் அருகில் இருந்த ஏனையோர் மீது கத்தியால் வெட்டி தாக்குதலையும் மேற்கொண்டனர்.

எனினும் பொலிஸாரின் எதிர்த்தாக்குதலின் போது குறித்த பயங்கரவாதிகள் மூவரும் அந்த இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டனர். அதே வேளை, இந்த சம்பவத்தின் போது குறைந்தது 48பேர் படுகாயமடைந்தனர்.

முஸ்லிம்களின் புனித மாதமான ரமழான் ஆரம்பமாகியுள்ள நிலையில் டிரக் வண்டிகள், கத்திகள் மற்றும் வான்கள் என்பவற்றை உபயோகித்து முஸ்லிம்கள் அல்லாத ஏனையோரை படுகொலை செய்யுமாறு ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஏனைய முஸ்லிம்களுக்கு கட்டளை விடுத்திருந்த நிலையிலேயே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

கடந்த மூன்று மாதகாலப்பகுதியில், பிரித்தானியாவில் நடத்தப்பட்ட மூன்றாவது தாக்குதல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Comments

தொடர்புடைய செய்திகள்