Home / உலகம் / பிரித்தானியா /

லண்டன் பிரிட்ஜ், – பரோ மார்கெற் தாக்குதல்களுடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் 12 பேர் கைது

Posted On : June 5, 2017

லண்டன் பிரிட்ஜ், மற்றும் பரோ மார்கெற்  பகுதிகளில் நேற்று இடம்பெற்ற தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 12 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கிழக்கு லண்டன் பாக்கிங் மாடிக் குடியிருப்பு பகுதியில் நடத்தப்பட்ட சுற்றி வளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக  மெட்ரோ பொலிற்றன்  பொலிஸ்   பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இன்று காலை  மெட்ரோ பொலிற்றன்  பொலிஸ்   பயங்கரவாத எதிர்ப்பு கட்டளைப் பிரிவினர், பாக்கிங் பகுதியில் நடத்திய விசேட தேடுதலின் போது, தாக்குதல்தாரிகளுடன் தொடர்பில் இருந்ததான சந்தேகத்தின்பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இந்த தாக்குதலையடுத்து சுட்டுக்கொல்லப்பட்ட நபர் ஒருவர் இந்த மாடிக் குடியெிருப்பு பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்ததாக அயலில் உள்ளவர்கள்  பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

 

Comments

தொடர்புடைய செய்திகள்