Home / உலகம் / பிரித்தானியா /

ஸ்கொட்லாந்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் பிரதமர் தெரேசா மே

Posted On : June 5, 2017

பிரித்தானிய பொதுத் தேர்தல் எதிர்வரும் ஜூன் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், பிரசார நடவடிக்கைகளின் பொருட்டு பிரதமர் தெரேசா மே ஸ்கொட்லாந்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்த நிலையில் பொதுத் தேர்தல் குறித்த பிரசார நடவடிக்கைகள் யாவும் ஒத்திவைக்கப்பட்டன.

அவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட பிரசார நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே பிரதமர் மே ஸ்கொட்லாந்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 7 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், 48 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Comments

தொடர்புடைய செய்திகள்