Home / உலகம் / சுவிஸ் /

100 அடி பள்ளத்தில் பாய்ந்த வாகனம்: ஒருவர் பலி, இருவர் படுகாயம்

Posted On : June 5, 2017

சுவிட்சர்லாந்தின் வாலெய்ஸ் பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் 15 வயது இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாலெய்ஸ் பகுதியின் அருகே அமைந்துள்ள கிராமம் ஒன்றில் சனிக்கிழமை இரவு இந்த சாலை விபத்து நிகழ்ந்துள்ளது. தெற்கு மாகாணம் ஒன்றில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வாகனமானது சீயோன் நோக்கி விரைந்து கொண்டிருந்ததாக பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.

வாகனத்தை 18 வயது நிரம்பிய இளைஞர் ஒருவர் செலுத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதனிடையே வாகனம் சாலையின் இடதுபக்கம் திரும்பும் நிலையில் நிலைத்தடுமாறி 100 அடி பள்ளத்தில் பாய்ந்துள்ளது. இதில் மரம் ஒன்றில் மோதி நின்றதால் மேலதிக பாதிப்பில் இருந்து தப்பியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் 15 வயது இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. வாகன சாரதியும் இன்னொரு நபரும் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து வழக்கு பதிந்துள்ள பொலிசார், விபத்தின் காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

தொடர்புடைய செய்திகள்