Home / உலகம் / பிரித்தானியா /

லண்டனில் பயங்கரவாத தாக்குதல்! பதற்றத்திற்குள் உருவான ஆவி மனிதன்

Posted On : June 6, 2017

லண்டனில் நேற்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், கிட்டத்தட்ட 50 பேர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதல் இடம்பெற்ற போது அங்கிருந்த மக்கள் பதற்றத்துடன் உயிரை காப்பற்றி கொள்வதற்கு அங்கும் இங்கும் ஓடினார்கள்.

எனினும் இந்த தாக்குதல் பதற்றத்தின் மத்தியில் நபர் ஒருவர் தனது கையில் வைத்திருந்த மதுபானம் கீழே சிந்தாமல் ஓடிய சம்பவம் தொடர்பில் பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர் மதுபானம் சிந்திவிடாமல் உயிரை காப்பற்றி கொள்வதற்கு ஓடும் புகைப்படம் ஒன்று ஊடங்களில் வெளியாகி பிரபல்யமடைந்துள்ளது.

சுருக்கமாக கூறினால் அந்த நகரத்தின் “ஆவி மனிதன் ” எனக் கூறி இந்த நபரை பலர் புகழ்ந்துள்ளனர்.

இந்த புகைப்படம் தொடர்பில் பல்வேறு நபர்கள் பல்வேறு விதமாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

Comments

தொடர்புடைய செய்திகள்