Home / செய்திகள் / இலங்கைச் செய்திகள் /

ஊழல் அமைச்சர்கள் பதவி விலகும் வரை வடக்கு மாகாணம் எங்கும் போராட்டங்கள்…!!!

Posted On : June 8, 2017

வடக்கு மாகாண சபையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயாவால் இன்றையதினம் (7.6.2017) ஊழல் தொடர்பான விசாரணை அறிக்கை சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. இது தொடர்பான தமது பக்க நியாயங்களை தெரிவிக்கவும் கலந்துரையாடலை மேற்கொள்ளவும் எதிர்வரும் 14.06.2017 விசேட அமர்வில் மாகாண சபையில் கலந்துரையாடப்படும்.

எனினும் வடக்கு மக்களின் வாக்குகளை கொள்ளையடித்து பதவிக்கு வந்த தமிழரசுக் கட்சியின் மாகாண சபை அமைச்சர்களின் ஊழல் செயற்பாடுகள் கண்டிக்கப்படத்தக்கது. அந்த வகையில்

டெனீஸ்வரன் -4
சத்தியலிங்கம்-5
குருகுலராஜா-9
ஐங்கரநேசன் -10
குற்றங்கள் சுமத்தப்பட்டு பல குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதுடன் ஒருசில நிதி ரீதியான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆதாரங்களை சமர்ப்பிக்க தமிழரசுக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. கட்சி ரீதியாக தடுக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமன்றி அனந்தி சசிதரன் போன்றவர்கள் வழக்கில் சாட்சி கூறுவதிலிருந்து ஒதுங்கிக் கொண்டார்கள். எனவே ஒதுங்கியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடாத்தப்பட்ட வேண்டும்.

அதுமட்டுமன்றி ஊடகவிலயளார்களுக்கு இந்த அறிக்கை பகிரங்கப்படுத்த வேண்டும். இது எமது மக்களின் பணம் எனவே முறைகேடுகள் குறித்து பகிரங்கப்படுத்தாது தடுக்கப்படும் பட்சத்தில் முதலமைச்சர் மீதான நம்பிக்கை மற்றும் ஊழலில் பங்கு உண்டா என்ற ஐயம் ஏற்படலாம்.

எனவே வடக்கு மாகாணத்தில் உள்ள
பொது அமைப்புகள்,
அரசியல் கட்சிகள்,
ஊடகவியலாளர்கள்,
அனைவரும் ஒன்று சேர்ந்து இவ் ஊழல் அமைச்சர்கள் பதவி விலகும் வரை வெகுஜன போராட்டங்களை நடத்த முன்வருமாறு பொது அமைப்புக்களிடம் பகிரங்க அழைப்பு விடுக்கின்றோம்.

-வ. பிரதீபன் –

Comments

தொடர்புடைய செய்திகள்