Home / உலகம் / அவுஸ்ரேலியா /

ஆஸ்திரேலியா அவுட் பங்களாதேஷ் ஹாப்பி!

Posted On : June 11, 2017

சாம்பியன்ஸ் டிராபியில் குரூப்-ஏ பிரிவில் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் மோதின. பிர்மிங்காம் நகர எட்க்பாஸ்டன் ஸ்டேடியத்தில் போட்டி நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பௌலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து தனது வாழ்வா? சாவா? போட்டியில், ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்களாக வார்னரும், ஆரோன் ஃபின்ச்சும் களமிறங்கினர்.
வார்னர் 21 ரன்களுக்கு ஆட்டமிழக்க அதிரடியாக ஆடிய ஃபின்ச் 68 ரன்களைக் குவித்தார். அடுத்து களமிறங்கிய ஸ்மித் 56 ரன்களைக் குவித்தார். அதிரடியாக ஆடிய டிரவிஸ் ஹெட் ஆட்டமிழக்கமால் 71 ரன்களைக் குவித்தார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 277 ரன்களை குவித்தது.
இதைத்தொடர்ந்து, 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு, ஆஸி., பௌலர்கள் நெருக்கடி கொடுத்தனர். ரூட், ராய் உட்பட நான்கு பிளேயர்களும் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால், ஆஸ்திரேலிய அணி சற்று ரிலாக்ஸான நேரத்தில் கேப்டன் மோர்கன் மற்றும் ஸ்டோக்ஸ் ஜோடி கைகோத்தனர்.
மோர்கன் 87, ஸ்டோக்ஸ் 102 ரன்கள் எடுத்தனர். இதனிடையே இங்கிலாந்து அணி 40.2 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்திருந்த போது மழைக் குறுக்கிட்டது. இதனால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி, இங்கிலாந்து அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியின் வெற்றி மூலம், பங்களாதேஷ் அணி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஆஸ்திரேலிய அணி தொடரை விட்டு வெளியேறியது.

Comments

தொடர்புடைய செய்திகள்