Home / செய்திகள் / இலங்கைச் செய்திகள் /

நாகரிகம் என்ற பெயரில் அநீதிகள் அரங்கேறுகின்றன!

Posted On : June 12, 2017

நாகரிகம் என்ற பெயரில்
அநீதிகள் அரங்கேறுகின்றன.
மதுவினால் மயங்கி
தெருவெங்கும் அன்றாடம்
அடி தடிகள்.
பூமியெங்கும் மதுவிற்கு
அடிமைகள் மானிடரின்
சிந்தனைகள் எண்ணி
பார்க்கையில் சிரிப்பும்
சினமும் மேலோங்குகிறது.

கண்ணிருந்தும் குருடர்களாய்
பண்படாத மானிடம்.
பாரினிலே தினம்
பாவிகளாய் உலா வருகிறது.
மனிதர்களின் வாழ்விலே
போட்டியும் பொறாமையும்
சூழ்ச்சியும் வஞ்சகமுமே
மனமெங்கும் வியாபித்திருக்கிறது.

சதி வேலை செய்யும்
மனித உருவிலுள்ள
வல்லூறுகளை சத்தியத்தின்
தீ சுட்டெரிக்க மறுக்கிறது.
உதட்டிலே சிரிப்பும்
உள்ளத்திலே வெறுப்புமாக
உறவுகளே வார்த்தைகளால்
சுட்டெரிக்கும் பொல்லாத
காலமிது…

வாக்கிலே வாய்மையில்லை
பேச்சிலும் நீதியில்லை
மனித உள்ளங்களே
மனித உள்ளங்களை
காயப்படுத்தும் கலிகாலம்.
மனித மனங்களில்
மனிதம் மரணித்து விட்டது.
நித்தமும் இதனால்
தொல்லைகள் ஏராளம்..

அன்புகள் எங்கும்
ஒழிந்து கிடக்கிறது.
ஆணவம் எங்கும்
தலை தூக்கி ஆடுகிறது.
பிறருக்கு கொடுத்து
இன்புற்று வாழ வேண்டிய
வாழ்க்கையை பிறரை
கெடுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறது
சில மனித உள்ளங்கள்.

சத்தியத்தின் தீ
இவர்களை சுட்டெரிக்க
மறுக்கிறது.
நீதியான உலகம்
ஓர் நாள் மலருமா?
விதியின் கைகளில்
விளையாட்டு பொம்மைகளாய்
சிக்கி தவிக்கும்
எம்மவரின் விளையாட்டை
என்று தீர்த்து வைப்பாய் இறைவா?!!!!

Comments

தொடர்புடைய செய்திகள்