Home / செய்திகள் / இலங்கைச் செய்திகள் /

உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவை நடாத்தும் பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டி 2017

Posted On : June 17, 2017

உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையின் 5வதுஉலகக்கிண்ணப் போட்டிகளை கனடா ரொறன்ரோவில் எபிக்பாட்மின்டன் விளையாட்டு அரங்கத்தில் (Epic Badminton SportsStadium) நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன.

உலகத் தமிழர் பூப்பந்தாட்டப்பேரவையின் கனடாக் கிளை கடந்தவருடம் உருவாக்கப்பட்டிருந்தது. அதன் நிர்வாகக் குழுவானதுஇந்த உலகக்கிண்ணப் போட்டிகளுக்கான ஆரம்ப வேலைகளை நுணுக்கமாக செய்து வருகின்றது.

உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையின் நிறுவனரும், அதன் நிர்வாக இயக்குனருமான திரு.கந்தையா சிங்கம், அவர்கள் கடந்த வருடம் வைகாசி மாதம் சுவிட்சர்லாந்திலிருந்து கனடாவருகை தந்திருந்தார். கனடாவின் போட்டியாளர்கள் சர்வதேச தரத்திலான போட்டிகளில் ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் பங்குபற்றுவதை நன்றியுடன் நினைவுகூர்ந்ததுடன், கடந்த வருடம் ஜேர்மனியில் நடந்த போட்டிகளில் 30 க்கும் மேற்பட்ட கனேடியப்போட்டியாளர்கள் பங்குபற்றியதை பெருமையாகக் குறிப்பிட்டிருந்தார் தொடர்ந்து உரையாற்றுகையில், இறகுப் பந்து விளையாட்டிற்கான இந்த சர்வதேச அமைப்பு புலம்பெயர்வாழ் தமிழர்களைக் கொண்டு அமைக்கப்பட்டதென்பதும் அந்த அமைப்பு தமிழ் இளைஞர்களின்விளையாட்டு திறனை சர்வதேச தரத்திற்கு வெளிப்படுத்தும் நிமித்தமாக ஒவ்வொரு வருடமும் வெவ்வேறுநாடுகளில் போட்டிகளை நடாத்துவதென்பதும், ஒரு சிறப்பானதும் சவால்கள் நிறைந்ததுமான விடயம்

என்றும் கூறினார்.

விளையாட்டுகளும் போட்டிகளும் பல்வேறு சமூகத்தினரையும் ஒன்றுபடுத்தி இணைக்கும் ஒரு வழியாகஇருப்பதனால், வெவ்வேறு இடங்களில் வாழும் புலம்பெயர் தமிழர்களிடையே இத்தகைய போட்டிகளைநடாத்துவதன் மூலம் அங்கிருக்கும் இளைஞர்களிடையே விளையாட்டுத்துறை நோக்கிய ஆர்வத்தினையும்ஊக்கத்தினையும் வளர்ப்பது மட்டுமல்லாமல், அவர்கள் ஏனைய சமூக அங்கத்தவர்களையும் ஈர்த்துஅவர்களோடு இணக்கமான ஒரு வாழ்வியல் சூழலை ஏற்படுத்தவும் முடியும்.

உலகம் முழுவதும் இறகுபந்தாட்டத்திற்கென ஆர்வலர்களும் வல்லுனர்களும் உள்ள நிலையில், புலம்பெயர்தமிழர்களிடையேயுள்ள இளைய சமூகம் அத்தகைய வசதிகளை பாவித்து இந்த விளையாட்டின்

Epic Badminton Sports

39 Bertrand Ave, Scarborough, ON M1L 2P3, Canada

Tournament Organizing Committee – Toronto 2017

5TH WORLD TAMIL BADMINTON FEDERATION TOURNAMENT – TORONTO 2017

Released on 15.06.2017Page 5

நுணுக்கங்களை கற்று தேர்ச்சி பெறவேண்டும். இதனை செயல்படுத்துவதற்காக உரிய பயிற்சிகள்அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.போரினாலும், மற்றும் இயற்கை அனர்த்தங்களினாலும் பாதிக்கப்பட்ட எமது இளைஞர்களுக்கு இந்தஇறகுப்பந்தாட்ட விளையாட்டை அறிமுகப்படுத்தி ஊக்கப்படுத்தி போட்டிகளை அங்கே நடாத்துவதன்மூலம் அவர்களையும் நிச்சயமாக தேசிய மட்ட , சர்வதேசமட்ட போட்டிகளில்பங்குபெறசந்தர்ப்பமளிக்கமுடியும்.

கடந்த வருடம் யேர்மனியில் நடைபெற்ற உலகக்கிண்ணப்போட்டியில் (2016) ஜெர்மனி,ஹாலந்து, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து,பிரான்சு, கனடா, நோர்வே, சுவீடன் டென்மார்க்,நெதர்லாந்து, இலங்கை போன்றநாடுகளிலிருந்து விளையாட்டு வீரர்கள்பங்குபற்றியதானது உலகளாவிய ரீதியில் ஒருஆர்வக் கிளர்ச்சியை தமிழர்களிடையேஉருவாக்கியுள்ளது.

மேலும், இந்த பேரவையின்ஒரு பிரதான நோக்கங்களுள் ஒன்று உலகம்முழுவதும் பரந்து வாழும் புலம் பெயர்தமிழர்களை ஒருங்கிணைத்து ஐக்கியப் படுத்துவதாகும்.இந்த போட்டிகளின் இன்னொரு கருத்தில் கொள்ள வேண்டிய விடயம் என்னவெனில், 2013 இல்சுவிட்சர்லாந்தில் நடந்த முதல் உலகக்கிண்ணப் போட்டிகளின் பின்னர் பெருமளவிலான இளஞர்கள்போட்டிகளில் பங்குபற்ற முன்வருவது மட்டு மல்லாமல், இவ் விளையாட்டின் இரசிகர்களிடமிருந்து பரந்தஅளவில் அதற்கான வரவேற்பும் கிடைத்து வருகிறது. அது மட்டுமல்லாமல், இது எமது இளைஞர்கள்எல்லாவிதமான விளையாட்டுத்துறைகளிலும் ஈடுபட்டு சர்வதேச தரத்தினை அடையக் கூடிய தன்மைஉள்ளவர்கள் என்ற ஒரு வலுவான நம்பிக்கையையும் எமக்கு ஏற்படுத்துகிறது.

WTBT 2013, Switzerland WTBT 2014, France

WTBT 2015, England

World Tamil Badminton Tournament – Germany 2016

5TH WORLD TAMIL BADMINTON FEDERATION TOURNAMENT – TORONTO 2017

Released on 15.06.2017Page 6

WTBT 2016, Germany Dinner Gala 2016, Germany 2017, Sri Lanka

சுவிட்சர்லாந்து, பிரான்சு, ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகளில் நடந்த உலகக்கிண்ணப்போட்டிகளை பார்வையிட்டவர்கள் இந்த இளைஞர்கள் தொடர்ந்தும் சிறப்பான பயிற்சிகளையும்நுணுக்கங்களையும் கற்றுக்கொள்வார்களேயானால், அவர்களால் சர்வதேச தரத்திற்கும் விளையாடமுடியும்என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்கள்.

இந்த வருடம் பதினைந்துக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து இரு நூறுக்கும் அதிகமான வீரர்கள்போட்டிகளில் பங்கு பற்றுவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. இவ்வகையான நிகழ்வுகளும்போட்டிகளும் தமிழ் இளைஞர்களிடையே ஒரு வித எழுச்சியையும் உணர்வையும் உண்டாக்கும் என

தீர்க்கமாக நம்புகிறோம்.

உலகத் தமிழர்பூப்பந்தாட்டப் பேரவை – கனடாக்கிளை

 

 

 

அகில உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவை (WTBF) நடத்தும் 05 வது வருடாந்த பூப்பந்தாட்ட உலக கிண்ணப்போட்டி – 2017 இம்முறை கனடாவில் இடம்பெறவுள்ளது.

உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவை நடாத்தும் 2017 ஆம் ஆண்டுக்கான சுற்றுப் போட்டி ஜூலை மாதம் 29 ஆம் 30 ஆம் திகதிகளில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வருடமும் ஒவ்வவொரு நாட்டில் ஒழுங்கு செய்யப்படும் இந்தப் போட்டி இந்த வருடம் கனடா ரொறன்ரோ (Toronto) இல் இடம் பெற உள்ளது.

இச் சுற்றுப்போட்டியில் பிரித்தானியா, ஜேர்மனி, நெதர்லாந்து, கனடா,சுவீடன், பிரான்ஸ்,டென்மார்க், ஐக்கிய அமெரிக்கா,இலங்கை ஆகிய நாடுகளிலில் இருந்து 300 க்கும் மேற்பட்ட தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

முன்னைய 3 உலக கிண்ண சுற்றுப்போட்டிகள் முறையே இங்கிலாந்து (2015) பிரான்ஸ்(2014) சுவிற்சலாந்து(2013) ஆகிய நாடுகளில் நடைபெற்றது.

Comments

தொடர்புடைய செய்திகள்
பிரதான செய்திகள்