Home / உலகம் / பிரான்ஸ் /

எரிவாயு நிரப்பிய கண்ணாடி போத்தல்கள் மகிழுந்தில் இருந்து மீட்பு!

Posted On : June 17, 2017

மகிழுந்து ஒன்றுக்குள், எரிவாயு நிரப்பட்ட 14 கண்ணாடி போத்தல்கள் ஜோந்தாமினர்களால் மீட்கப்பட்டுள்ளன. Isère பகுதியில் மிக ஆபத்தான Seveso ஆலைக்கு அருகே வைத்து இந்த மகிழுந்து தேசிய ஜோந்தாமினர்களால் மீட்கப்பட்டுள்ளது.

Isère இன் Chasse-sur-Rhone நகரில் வைத்து இந்த மகிழுந்து மீட்கப்படுள்ளது. நீண்ட நேரமாக ஆளில்லாத மகிழுந்து ஒன்று தரிப்பிடத்தில் நின்றுகொண்டிருந்தது. அப்போது எரிவாயு கசியும் வாசம் மகிழுந்தில் இருந்து வெளியேற, ஜோந்தாமினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஜோந்தாமினர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சந்தேகத்துக்கிடமான மகிழுந்து ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. 14 எரிவாயு நிரப்பட்ட கண்ணாடி போத்தல்கள் உள்ளிருந்தன. இதில் 3 போத்தல்கள் எரிவாயு கசிவுடன் இருந்தன. Chasse-sur-Rhone நகரின் Pasteur வீதியில் உள்ள தரிப்பிடத்தில் இந்த மகிழுந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் உலங்கு வானூர்தி மூலம் எண்ணற்ற ஜோந்தாமினர்கள் குவிக்கப்பட்டு, மகிழுந்து இருந்த இடத்தில் இருந்து 500 மீட்டர்களுக்கு வாகனங்கள் தடை செய்து, பொதுமக்களை அவசரமாக வெளியேற்றி, பின்னர் மகிழுந்து, வெடிபொருட்கள் அகற்றும் படையினரால் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தவிர பயங்கரவாத தாக்குதல் எதுவும் திட்டமிட்டப்பட்டிருந்ததாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. மகிழுந்தின் உரிமையாளர் 27 வயதுடைய நபர் என பின்னர் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைப்பற்றப்பட்ட எரிவாயு போத்தல்களின் மொத்த எடை 13 கிலோ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்
பிரதான செய்திகள்