Home / உலகம் /

ஆப்கானிஸ்தானில் போலீஸ் அலுவலகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்

Posted On : June 18, 2017

ஆப்கானிஸ்தானில் போலீஸ் அலுவலகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் போலீஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். 3 போலீசார் காயம் அடைந்தனர்

ஆப்கானிஸ்தானில் போலீஸ் அலுவலகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்: போலீஸ் அதிகாரி பலி

ஆப்கானிஸ்தானில் கிழக்கு பக்தியா மாகாண தலைமை போலீஸ் அலுவலகம் கார்டெஸ் நகரில் உள்ளது. இன்று காலை அங்கு தீவிரவாதிகள் புகுந்தனர். முன்னதாக வாசலில் ஒரு தற்கொலை படை தீவிரவாதி கார் குண்டை வெடிக்க செய்தான். அவனை தொடர்ந்து உள்ளே சென்ற தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். பதிலுக்கு போலீசாரும் துப்பாக்கியால் சுட்டனர். அதில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் ஒருவன் பதுங்கி இருக்கிறான் அவனை பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் போலீஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். 3 போலீசார் காயம் அடைந்தனர். இதற்கிடையே இத்தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.

Comments

தொடர்புடைய செய்திகள்
பிரதான செய்திகள்